×

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலூரில் மாணவர்கள் போராட்டம்

கடலூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் அனுமதி அளித்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கடலூர் மஞ்சுக்குப்பம் மைதானத்தில் போராட்டம் நடத்த இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு மைதானத்திற்கு வந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் அனுமதி அளித்ததை கண்டித்தும் முகநூலில்  இளைஞர்களும், மாணவர்களும்  2 நாட்களுக்கு முன்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். அதற்கு முகநூல்  அமைப்பினர் என்று சொல்லி போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார்கள் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்த நிலையில் காலையிலிருந்து மைதானத்திற்குள் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஒரு டி.எஸ்.பி தலைமையில் 5 ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள், 100-க்கும் மேற்பட்ட  காவலர்கள் உட்பட பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு இருந்தனர்.

Tags :
× RELATED நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக...