×

தெற்கு ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனுதாரருக்கு அபராதம்

மதுரை: ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுதாரருக்கு ஐகோர்ட் கிளை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அழகப்பபுரத்தைச் சேர்ந்த தமிழ்மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘டிசம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரையிலான காலகட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு நேரங்களில் மாற்று ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.இதில் முன்பதிவு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு காரணமான தலைமை வணிக மேலாளர் முதல் மூத்த கோட்ட வணிக மேலாளர் வரை உரிய நடவடிக்கை எடுக்கவும், அதற்குரிய பணத்தை அவர்களிடம் வசூலிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், ‘‘பொதுமக்களின் நலன் கருதி ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், மனுதாரர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறார். இது பயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற மனுக்களை அனுமதிக்கவும் முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளருக்கு 15 நாட்களில் அவர் அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்….

The post தெற்கு ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனுதாரருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Madurai ,High Court ,Sivagangai ,Dinakaran ,
× RELATED கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார...