×

தெற்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், நவ. 26: சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் தெற்கு கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (27ம் தேதி) காலை 11 மணிக்கு சேலம் அன்னதானப்பட்டியல் உள்ள தெற்கு கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு கலந்துகொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், சேலம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்திருந்து மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இத்தகவலை சேலம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

The post தெற்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : South Zone ,Salem ,Salem South Division Power ,Salem Power Distribution Circle ,South Division Office ,Salem Food Distribution Circle ,Dinakaran ,
× RELATED கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்