×

தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிக பலத்த மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், ஈரோடு, நெல்லை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும். நாளை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். 12-ல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்யக்கூடும். கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்காசி, திருப்பூர், குமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். 13 மற்றும் 14-ல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிதமான மழை  பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கோவை, நீலகிரி, தேனியில் பொதுமக்கள் மலை ஏறுவதை தவிர்க்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. 11, 12, 13 தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று முதல் 14-ம் தேதி வரை மாலத்தீவு, கேரளா, கர்நாடகா, கரையோரம் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் மத்திய மேற்கு, தென் மேற்குப் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

The post தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre ,Chennai ,Meteorological Centre ,South ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...