×

தூத்துக்குடி மாவட்டத்தில் 48 பஞ்சாயத்துகளில் வேளாண் வளர்ச்சி திட்டம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி : தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1997 பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் 48 பஞ்சாயத்துகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அய்யனடைப்பு பஞ். சோரீஸ்புரம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இத்திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்,  பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி விதை  தொகுப்புகள், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ஊக்கத் தொகை, பழக்கூடைகள்  மற்றும் ட்ரம், பழச்செடிகள், மரக்கன்று தொகுப்புகளை வழங்கினார். வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் வரவேற்றார். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். தரிசு நிலங்களில் ஆழ்துளை, குழாய் கிணறு, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், ஊரணிகள், வரத்துக் கால்வாய்கள் தூர்வாருதல் போன்றவற்றையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சண்முகையா எம்எல்ஏ, யூனியன் சேர்மன் வசுமதி அம்பா சங்கர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முத்துக்குமாரசாமி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ராஜன், அய்யனடைப்பு பஞ். தலைவர் அதிர்ஷ்டகணபதி ராஜேந்திரன், திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, நல்லூர் ஊராட்சி செயலாளர் பரிசமுத்து, தொண்டரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், விவசாய அணி துணை அமைப்பாளர் ஹரிகிருஷ்ண கோபால், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், முத்துப்பாண்டி, ராஜ், சித்திரைவேல், ஆறுமுகம், கணேசன், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாப்பிள்ளையூரணியில் நடந்த நிகழ்ச்சியில் பஞ். தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உரம், விதைகள், பூச்சி மருந்துகள், கைத்தெளிப்பான் கருவிகள், தென்னங்கன்று உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில் வேளாண்மை உதவி அலுவலர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….

The post தூத்துக்குடி மாவட்டத்தில் 48 பஞ்சாயத்துகளில் வேளாண் வளர்ச்சி திட்டம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anita Radhakrishnan ,Tuticorin district ,Thoothukudi ,Department of Agriculture and Farmers' Welfare ,Tamil Nadu ,Panchayats ,
× RELATED பல்கலைக்கழக இணை வேந்தரான அமைச்சர்...