×

தூத்துக்குடி மாநகராட்சி 19வது வார்டில் குறைகேட்புமக்களின் கோரிக்கைகள் முழுமையாகநிறைவேற்றி தர நடவடிக்கை

தூத்துக்குடி, ஏப்.11: தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்ற அமைச்சர் கீதாஜீவன், கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு பகுதியான மகிழ்ச்சிபுரம், மங்களாபுரம், கேவிகே நகர், அண்ணாநகர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா
ஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், மின்விளக்கு, கால்வாய் வசதி, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

மேலும் இந்த பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயை பார்வையிட்டு கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் அந்த பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார் அப்போது மங்களபுரம் பகுதிகளில் மின்விளக்குகள், புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டாலின் பாக்கியநாதன், சேகர், மண்டல தலைவர் அன்னலெட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா, கவுன்சிலர் சோமசுந்தரி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாநகர திமுக தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, துணை அமைப்பாளர் மணி, சிறுபான்மை அணி ஜீவன்ஜேக்கப், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், வட்ட செயலாளர் பத்மாவதி, வட்ட பிரதிநிதிகள் சுடலை, அமிர்தலிங்கம், மேகநாதன், செபஸ்தியான், பாஸ்கர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

The post தூத்துக்குடி மாநகராட்சி 19வது வார்டில் குறைகேட்பு
மக்களின் கோரிக்கைகள் முழுமையாக
நிறைவேற்றி தர நடவடிக்கை
appeared first on Dinakaran.

Tags : Tuticorin Municipal Corporation ,Thoothukudi ,Minister ,Geethajeevan ,
× RELATED அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!