×

தூத்துக்குடியில் வரும் 9ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜூன் 7: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 9ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம்என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடியில் வரும் 9ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Tuticorin District Employment and Vocational Guidance Center ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு