×

தூத்துக்குடியில் அலையாத்தி மரக்கன்று நடும் நிகழ்ச்சி பசுமைப்பரப்பை 33% அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

தூத்துக்குடி, ஜூன் 6: தமிழ்நாட்டில் பசுமைப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தூத்துக்குடியில் அலையாத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய அலையாத்தி காடுகளை அதிகப்படுத்தும் வகையில் அலையாத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ரோச் பூங்கா மற்றும் படகு குழாம் பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டி வரும் 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பசுமை முதன்மையாளர் விருதுகளையும், தலா ஒரு லட்ச ரூபாய்க்கான ரொக்கப் பரிசுகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து அலையாத்தி காடுகள் குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டு பேசுகையில்,

தமிழ்நாட்டில் பசுமைப் பகுதிகள் 23 சதவீதமாக உள்ளது. இதை 33 சதவீதமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதன் காரணமாக விரைவில் முதலமைச்சரின் இலக்கு நிறைவு பெறும், என்றார். நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் கவுரவ்குமார், கூடுதல் கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மீனவரணி அமைப்பாளர் அந்தோனிஸ்டாலின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ராமகிருஷ்ணன், ரெக்சிலின், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சக்திவேல், மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அரிகணேஷ், ராஜபாண்டி, விளாத்திகுளம் வனச்சரகர் கவின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் அலையாத்தி மரக்கன்று நடும் நிகழ்ச்சி பசுமைப்பரப்பை 33% அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,Allayati ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...