×

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

 

துறையூர், செப்.14: திருச்சி மாவட்டம் துறையூர் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வழங்கினார். துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தலைமை வைத்து 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அறங்காவலர் குழு நியமன தலைவர், நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன், வார்டு கவுன்சிலர்கள் வீரமணிகண்டன், கார்த்திகேயன், பாஸ்கரன், இளையராஜா மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.

The post துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Thadharyur ,Thardiyur ,MLA ,Stalin Kumar ,Tamil Nadu government ,Thardiyur, Trichy district ,Sardiyur ,
× RELATED துறையூர் நகராட்சியில் நகர் மன்ற சாதாரண கூட்டம்