தும்மல் ஒரு அபசகுணம் என்றும், யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்றும் பல மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆனால் நம் நாசியில் உள்ள மியூகஸ்சவ்வின் நரம்புமுனைகள் எரிச்சல்படும்போது உடல்காட்டும் எதிர்ப்பே தும்மல் ஆகும். ஜலதோஷம் பிடிக்கும்போதோ தூசு,துகள் நம் மூக்கினுள் புகுந்து விடும்போதோ நம்நாசி நரம்பு முனைகள் எரிச்சலுறுகின்றன. அவ்வேளையில் தும்மல் ஏற்படுகிறது. அதிகப்படியான ஒளியை பார்க்கும் போது நமது பார்வைநரம்புகள் தூண்டப்படும்போதும் தும்மல் தோன்றலாம். சூரியனை நேராக பார்க்கும் போது தும்மல் வருவது இதற்கு எடுத்துக்காட்டு. தும்மல் வருவதற்கு நமது உடலினுள் சுமார் 2.5லிட்டர் காற்று நுழைந்து அதை தொடர்ந்து நுரையீரல் மற்றும் அடிவயறு சுருங்கி அக்காற்றை அழுத்தத்துடன் வெளியேற்றுகிறது. தும்மலின்போது வெளிவரும் காற்று சுமார் மணிக்கு பல கிமீ வேகத்தில் வெளியேறுவதால் தூசுக்கள் வெளியேறிவிடுகிறது. தும்மலின் பின்பு நாம் புத்துணர்ச்சி பெறுகிறோம்.
The post தும்மல் ஏன் வருகிறது? appeared first on Dinakaran.
