×

தீபாவளி பண்டிகையையொட்டிஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்

 

ஈரோடு, நவ.10: தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல பொது மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் வசதிக்காக 12ம் தேதி வரை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து திருச்சி, சேலம், மதுரை, சென்னை, நாமக்கல், ராசிபுரம், திருப்பூர், சத்தி, பழனி, கரூர் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் 350க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும், ஈரோட்டிலிருந்து கம்பம், குமுளி, சிவகாசி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், வேலூர், புதுச்சேரி, செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை ஆகிய ஊர்களுக்கு சென்று வர www.tnstc.in என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய ஊர்களிலிருந்து கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு 12ம் தேதி வரை தினந்தோறும் இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தீபாவளி பண்டிகையையொட்டிஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Erode, Tirupur, Coimbatore ,Diwali ,Erode ,Erode, ,Tirupur, ,Coimbatore ,Erode, Tirupur, ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு