×

திறமை, சம்பள அடிப்படையில் எச்1-பி விசா தேர்வு முறையில் மாற்றம்

வாஷிங்டன்: பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், எச் 1-பி விசாவுக்கான தேர்வு முறையில் அதிபர் டிரம்ப் சில திருத்தங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் வரும் 19ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதன் பிறகு, நாட்டின் 46வது அதிபராக ஜோ பிடென் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தனது பதவிக் காலத்தில் எச் 1-பி விசா நடைமுறைகளில் செய்த கடுமையான நடவடிக்கைகளை மாற்றி அமைக்க, சில திருத்தங்களை செய்ய டிரம்ப் முன்வந்துள்ளார். அதன்படி, தற்போதைய லாட்டரி நடைமுறை இல்லாமல், ஊதியம் மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த விசா வழங்குவதற்கான நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முறை இன்னும்  2 மாதங்களில்  அமலுக்கு வர உள்ளது. எச் 1-பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பது, இதற்காக விண்ணப்பிக்கும் பெரும்பாலான இந்திய, சீன நிறுவனங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது….

The post திறமை, சம்பள அடிப்படையில் எச்1-பி விசா தேர்வு முறையில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Washington ,President Trump ,Dinakaran ,
× RELATED வாஷிங்டனில் சுட்டெரித்த வெயிலால் உருகிய ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை