- திருவையாறு
- கருப்பூர் கவுதேசி தொண்டு நிறுவனம்
- தஞ்சாவூர் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
- ஜனாதிபதி
- உதவி பேராசிரியர்
- சரவணன்
திருவையாறு, ஜூலை 19: திருவையாறு அருகே கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனம் சார்பில் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக தலைவர் உதவி பேராசிரியர் சரவணன், ஏழை பெண்கள் 10 பேருக்கு பால் கறவைமாடும், 50 பெண்களுக்கு தையல் மிஷின்களும், கோயில்கள் உழவாரப்பணிக்கு நிதி உட்பட 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில், கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி வரவேற்றார்.
தஞ்சாவூர் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் துர்கா உமா மகேஸ்வரி, பாபநாசம் சிவனடியார் பாலசுப்ரமணியன், அய்யம்பேட்டை, சச்சிதானந்த மடத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜசேகரன், கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கவ்டெசி நிறுவன பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கனேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர். வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.
The post திருவையாறு அருகே நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.
