×

திருவாலங்காடு பகுதியில் மக்களை அச்சுறுத்தும் மின்கம்பம்

திருத்தணி: திருவாலங்காடு பகுதி தெருக்களில் மின்கம்பம் உடைந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காட்டில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. இங்குள்ள தெருக்களில் சுமார் 25 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் தற்போது ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. குறிப்பாக திருவாலங்காடு சன்னதி தெருவில் உள்ள மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சு உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் லேசான காற்று வீசினால்கூட மின்கம்பம் அசைந்தாடுகிறது. மேலும் ஆங்காங்கே மின்கம்பிகள் பழுதாகி தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் பல பகுதிகளில் மழை பெய்யும்போது ஷாக் அடிப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மின்கம்பம், வயர்களை மாற்றியமைக்கவேண்டும் என்று திருவாலங்காடு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் மின்சார வாரியம் நடவடிக்ைக எடுக்காமல் உள்ளது.இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘’திருவாலங்காடு பகுதியில் பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. மின்வயர்களும் பழுதாகிவிட்டதால் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. இந்த பிரச்னையை போக்க  புதிய மின்கம்பம், வயர் அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்….

The post திருவாலங்காடு பகுதியில் மக்களை அச்சுறுத்தும் மின்கம்பம் appeared first on Dinakaran.

Tags : Thiruvalangadu ,Thiruthani ,Thiruvalankad ,Thiruvallur district ,Thiruvalankadam ,
× RELATED ஊர்த்துவ நடனம் புரியும் திருவாலங்காடு நடராஜர்!