×

திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது: திருக்குறள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

சென்னை: திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமிதம் திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகின்றது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திருக்குறள் வாழ்க்கை நெறிகளை கற்பிப்பதை மட்டுமே கூறுகின்றனர் ஆனால் அது கற்பிக்கும் அண்மிக்கம்பற்றி யாரும் பேசவில்லை என்று ஆளுநர் கூறியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப்  வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார் என்று ஆளுநர் உரையாற்றினார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் அனைவருக்கும் தெரியும் அனால் ஜி.யூ.போப் அதை மாற்றி எழுதியுள்ளார். திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். திருக்குறள் அதன் வடிவம் மாறாமல் மொழி பெயர்க்க வேண்டும் எனவும் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் எனவும் அவர் கூறினார். மேலும், ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது என அவர் தெரிவித்தார்.திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர் என்று சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.  …

The post திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது: திருக்குறள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Thirukkural ,Chennai ,Thiruvalluvar ,Tamil Nadu ,India ,Thirukkural… ,Tiruvalluvar ,Thirukkural Conference ,
× RELATED ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்