×

திருமலாபுரத்தில் ரூ.22.65 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு கலெக்டர் துரை ரவிச்சந்திரன், ராஜா எம்எல்ஏ பங்கேற்பு

தென்காசி, ஜூன் 8: மேல நீலிதநல்லூர் ஒன்றியம் திருமலாபுரத்தில், புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்ந்தமரம் மஜரா ஊராட்சி, திருமலாபுரம் கிராமத்தில், 2020-21ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஐா முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் ஊராட்சி தலைவர் செண்பகக்கனி ரவி, மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) வேலம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்

The post திருமலாபுரத்தில் ரூ.22.65 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு கலெக்டர் துரை ரவிச்சந்திரன், ராஜா எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Collector ,Durai Ravichandran ,Raja MLA ,Tirumalapuram ,Tenkasi ,Upper Neelithanallur Union ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...