×

திருப்போரூரில் பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு

திருப்போரூர்: கலைஞரின் பிறந்த தினமான நேற்று தமிழ்நாடு முழுவதிலும் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இரா.பரசுராமன் வரவேற்றார். திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் இதில் கலந்து கொண்டு சுகாதாரப் பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் துய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி மற்றும் எவர்சில்வர் குடம் போன்றவை வழங்கப்பட்டது. முடிவில், திருப்போரூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.     …

The post திருப்போரூரில் பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Tamil Nadu ,
× RELATED 24 விநாடிகளில் 50 எழுத்துகளை தட்டச்சு...