×

திருப்புத்தூர் அருகே உறைகிணறு, சுடுமண் சில்லாக்குகள் கண்டுபிடிப்பு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நேற்று கி.மு 6ம் நூற்றாண்டு முதல் கி.பி 3ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த உறைகிணறு மற்றும் தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரை சேர்ந்த வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தனலட்சுமி, வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் ஆகியோர் கே.வைரவன்பட்டி ஊராட்சி பாலாற்றங்கரையில் விசாலாட்சி நகர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சேதமடைந்த நிலையில் ஒரு உறைகிணறு, சுடுமண் சில்லாக்குகள், வட்ட வடிவ கற்சில்லாக்குகள், ஏராளமான கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்கலன்களின் உடைந்த பாகங்கள் கற்கருவிகள் மற்றும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் பல மண்கலன்களில் அழகு வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஒரு சில பானை ஓடுகளில் குறியீடுகள் உள்ளது. இதைத்தவிர சில எலும்புத்துண்டுகளும் கண்டறியப்பட்டன.இவற்றை நேரடியாக ஆய்வு செய்த, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கண்ணன் கூறுகையில், ‘‘கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இரும்புக் காலம் மற்றும் சங்க காலத்தை (சுமார் கி.மு 6ம் நூற்றாண்டு முதல் கி.பி 3ம் நூற்றாண்டு வரை) சேர்ந்தவையாகும்’’ என தெரிவித்தார்.கே.வைரவன்பட்டி அருகே காரையூரில் இதே காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது. தொல் பொருட்கள் கிடைத்த இடத்தில் முறையான தொல்லியல் கள ஆய்வு மற்றும் அகழாய்வு மேற்கொண்டால் மேலும் பல புதிய தொல்லியல் தடயங்களை கண்டறிய வாய்ப்புள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்….

The post திருப்புத்தூர் அருகே உறைகிணறு, சுடுமண் சில்லாக்குகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,
× RELATED பட்டமளிப்பு விழா