×

ஓட்டுக்காக கிராமத்தை தத்தெடுக்கவில்லை : மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தை மக்கள் நீதி மையம் தத்தெடுக்க உள்ளது. அங்கு மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கமல் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, கிராமங்களை தத்தெடுக்கவில்லை. வெற்றி பெற முடியும் என நினைக்கும் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். 12 ஆயிரம் கிராமங்களை தத்தெடுக்க முடியாது. 8 கிராமங்களை தத்தெடுக்கிறோம். மக்களின் ஆதரவு இருந்தால், 12 ஆயிரம் கிராமங்களை தத்தெடுக்க முடியும் என கூறியுள்ளார்.

அதிகத்தூர் அரசுப் பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித் தரப்படும் என கிராம மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் பேசியுள்ளார். பள்ளியில் கழிப்பறை கட்டவும் வேலை நடைபெற்று வருகிறது. அதிகத்தூரில் நீர் சேகரிக்கும் வழிகள் ஏற்படுத்தி தரப்படும் என கமல் கூறியுள்ளார். அதிகத்தூர் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மேலும் ஏரிகள் புனரமைக்கப்படும் என மக்கள் மத்தியில் கூறியுள்ளார். இந்த கிராமத்தில் மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. நரிக்குறவர் மற்றும் இருளர் வாழ்க்கைத்தரம் மேம்பட மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த...