×

திருப்பதி வரலாற்றில் சாதனை மே மாதத்தில் மட்டுமே ரூ.130 கோடி காணிக்கை

திருப்பதி: தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயிலில் மே மாதத்தில் மட்டும் ₹130.29 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் 22.62  லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹130.29 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். பக்தர்களுக்கு 1.86 கோடி லட்டுகளை தேவஸ்தானம் விற்பனை செய்துள்ளது. 47.03 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் அருந்தினர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 10.72 லட்சம் பேர் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். தேவஸ்தானம் வரலாற்றில் முதல்முறையாக ஒரே மாதத்தில் ₹130 கோடி காணிக்கையாக கிடைத்திருப்பது முதல் முறையாகும் என்று திருப்பதி தேவஸ்தானம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது….

The post திருப்பதி வரலாற்றில் சாதனை மே மாதத்தில் மட்டுமே ரூ.130 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Devasthanam ,Etummalayan ,Tirupati Eyumalayan… ,
× RELATED லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது உண்மை இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்