×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர், டிச., டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு : ஒன்றரை மணி நேரத்தில் முடிந்தது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர், டிசம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த டிக்ெகட்டுகளை ஒன்றரை மணி நேரத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் கோசாலைக்கு பக்தர் ஒருவர் 2 பசுக்கள், கன்றினை தானமாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் நேற்று வழங்கினார். அவர் சிறப்பு பூஜை செய்து கோசாலையில் பசுக்கள், கன்றினை ஒப்படைத்தார். தொடர்ந்து, கோசாலை முழுவதும் ஆய்வு செய்தார். இதையடுத்து, சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஏழுமலையானுக்கு நாட்டு மாடுகளின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் கொண்டு நவநீத  சேவையை நடத்துகிறோம்.  இங்கு சுமார் 150 பால் கறக்கும் மாடுகள் இருப்பு வைக்கும் விதமாக பணிகள் மேற்கொண்டு வருகிறோம். 2 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இங்கு 60 நாட்டு இன மாடுகளுடன் 70 முதல் 80 பசுக்களை தானம் செய்ய பல நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட், இலவச தரிசன டிக்கெட்களின்  எண்ணிக்கை  கடந்த மாதத்தை விட அதிகரிக்கப்பட்டு நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட ஒன்றரை மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். கிராமப்புறங்களில் உள்ள பக்தர்கள் ஜியோ கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். கொரோனா மேலும்  கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் திருப்பதியில் குறைந்தளவில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.  இந்தாண்டு மே மாதம் முதல் இயற்கை வேளாண்மை பொருட்களால் தயார் செய்யப்படும் நைவேத்தியம் ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக திட்டமிட்டுள்ளோம். மேலும் இயற்கை விவசாயத்தை   ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக, வரும் 30, 31ம் தேதிகளில் திருப்பதியில் உள்ள மகதி அரங்கில் இயற்கை வேளாண் சம்மேளனம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நாட்டில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாய பிரபலங்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் ெதரிவித்தார். …

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர், டிச., டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு : ஒன்றரை மணி நேரத்தில் முடிந்தது appeared first on Dinakaran.

Tags : Tirupati Seven Malayan Temple ,Tirumala ,Tirupati Eyumalayan Temple ,
× RELATED திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரமான...