×

திருப்பதியில் ₹20 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு-வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

திருமலை : திருப்பதியில், ₹20 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர்.திருப்பதி புறநகரில் நீரூ –  மீரூ (தண்ணீர் – நீங்கள்) திட்டத்தின்கீழ் சர்வே எண் 6ல் உள்ள 75 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 9 ஏக்கர் அரசு நிலம் 2002-ம் ஆண்டு திருப்பதி புறநகர் மேம்பாட்டு (துடா)  ஆணையத்திடம்  ஒப்படைக்கப்பட்டது.9 ஏக்கர் அரசு நிலத்தில் துடா அதிகாரிகள் 1380 மா, தேக்கு மரங்களை நட்டு அதன் பலன்களை பெறுவதற்கு ஏலம் விட்டனர். ஏலத்தில் எடுத்த நில உரிமையாளர் நிலம் தனக்குச் சொந்தமானது எனக் கூறியதால் வருவாய்துறை அதிகாரிகள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சுமார்  12 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிலம் அரசு நிலம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சர்வே செய்து தாசில்தாரிடம் வழங்கினர். இதனை அடுத்து ₹20 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டு வருவாய்துறையினர்,  துடா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் அரசு நிலத்தை துடா அதிகாரிகளிடம் ஒப்படைத்த உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்….

The post திருப்பதியில் ₹20 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு-வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Tirumalai ,Tirupati ,
× RELATED திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை