- திருத்தரப்பூண்டி நெடும்பலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி
- பாராளுமன்ற மக்களவைத் தொகுதி
- திருவாரூர் மாவட்டம்
- திருமூர்த்தபோண்டி
- Nedumbalam
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது . திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் கட்டிமேடு ஆதிரெங்கம், மணலி , நெடும்பலம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதி முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று அவர்களிடம் இருந்து தபால் வாக்குபதிவு பெறும் பணியை திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகத்தில் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்மணி நேற்று முன்தினம் வைத்தார். இதில் தாசில்தார் காரல் மார்க்ஸ், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பரமேஸ்வரி, தனி தாசில்தார் மலர்கொடி, தலைமையிடத்து துணை தாசில்தார் சந்திரமோகன் , மண்டல துணை தாசில்தார் ஜோதி பாசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருத்துறைப்பூண்டி நெடும்பலத்தில் 95 வயது மூதாட்டி வாக்குரிமை செலுத்தினார் appeared first on Dinakaran.