×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது, முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் முன்புறமுள்ள கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்கிறார். நாளை மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம் கோயிலில் நடக்கிறது. இரவில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது….

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Tiruchendur ,Surasamharam ,Tiruchendur Kanthashashti festival ,Thiruchendur Subramania Swamy Temple ,Kanthashasti ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...