திரளான பக்தர்கள் தரிசனம் கரூர் பைபாஸ் சாலையில் வாகனங்கள் தென்னை மட்டைகளை திறந்த நிலையில் ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம்

கரூர்: கரூர் பிரதான பைபாஸ் சாலைகளில் தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திறந்த நிலையில் செல்வதால், சாலையில் மட்டைகள் விழுந்து விபத்து அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை சுற்றிலும் உள்ள திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்ட பகுதிகளில் தென்னை மட்டையில் இருந்து நாரை பிரித்து எடுக்கும் ஆலைகள் அதிகளவு உள்ளன. கயறு உற்பத்திக்கு தென்னை நார்கள் முக்கியம் என்பதால் இந்த ஆலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலைகளுக்கு கரூர் மாவட்டம் மாயனூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, தென்னை மட்டைகள் லாரி மற்றும் வேன்களில் ஏற்றப்பட்டு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அவ்வாறு லாரி மற்றும் வேன்களில் ஏற்றி செல்லப்படும் தென்னை மட்டைகள் திறந்த நிலையில் செல்லப்படுவதால், அதிக வேகம் காரணமாக வேன்களில் இருந்து தென்னை மட்டைகள் சாலைகளில் பரவி கிடக்கிறது. இது போன்ற வாகனங்கள் அதிகளவு திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு போன்ற முக்கிய சாலைகளின் வழியாக செல்கிறது. இதே சாலைகளில் ஆயிரக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும் செல்கிறது. இந்நிலையில், சாலையின் மையத்தில் விழுந்து கிடக்கும் தென்னை மட்டைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரூர் மாவட்ட பகுதிகளின் சில இடங்களில் சாலை விபத்தும் ஏற்பட்டுள்ளது.எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில், தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், தார்ப்பாய் போட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, நட வடிக்கை எடுத்து தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் என வாகனஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை

The post திரளான பக்தர்கள் தரிசனம் கரூர் பைபாஸ் சாலையில் வாகனங்கள் தென்னை மட்டைகளை திறந்த நிலையில் ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: