- வைரவூர்-அசகளத்தூர் பாலம்
- தியாகதுருகம்
- தியாகதுர்கம்
- தியாகதுருகம்.விருகாவூர்
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- தின மலர்
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பாலத்தின் தடுப்பு கட்டைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூர் அடுத்த அசகளத்தூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் பழமை வாய்ந்த இணைப்பு பாலம் உள்ளது. கோமுகி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் இந்த பாலத்தின் மரூர் வழியாக கடலூர் மாவட்டத்துக்கு செல்கிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கட்டைகள் சேதமடைந்தும் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். விருகாவூர் முதல் அசகளத்தூர், அடரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் இவ்வழியாக தினமும் அரசு பேருந்துகள், பள்ளி பேருந்துகள், லாரி, கரும்பு டிராக்டர், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் இப்பாலத்தை தான் கடந்து செல்கின்றன.பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கட்டைகள் சேதமடைந்தும் உடைந்தும் காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாலத்தில் இருந்து தவறி கீழே விழும் நிலையும் உள்ளது. ஆகையால் சேதமடைந்த தடுப்பு கட்டைகளை சீரமைத்தும், தடுப்பு கட்டைகள் இல்லாத இடத்தில் தடுப்பு கட்டைகளை அமைத்தும் தருமாறு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post தியாகதுருகம் அருகே விருகாவூர்-அசகளத்தூர் பாலத்தில் பக்கவாட்டு தடுப்பு கட்டைகள் இல்லாததால் விபத்து அபாயம்-சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.