×

திமுக சார்பில் நாகையில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உதயநிதி வழங்கினார்

நாகப்பட்டினம்: நாகையில் திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாகையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், விளையாட்டு உபகரணங்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் காப்பீட்டு திட்டம் ஆகியவை வழங்குதல் மற்றும் மாவட்ட திமுக அலுவலகம் கட்டுமான பணிகள் தொடக்க விழா இஜிஎஸ்பிள்ளை கல்வி குழும விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நாகப்பட்டினம் நகர திமுக செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து வரவேற்றார்.

திமுக மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமை வகித்தார். அமைச்சர் ரகுபதி, தாட்கோ தலைவர் மதிவாணன் முன் னிலை வகித்தனர். மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, மாவட்ட அலுவலகம் கட்டுமான பணி தொடக்கம், இஜிஎஸ்பிள்ளை கல்லூரி விளையாட்டு மைதானம் கட்டுமான பணி தொடக்கம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் வேதரத்தினம், அசோகன், காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் நாகையில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Udhayanithi ,Nagai ,Nagapattinam ,Udayanidhi Stalin ,Udayanidhi ,Dinakaran ,
× RELATED அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி