×

திமுக ஆலோசனைக் கூட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி திமுக கட்சியின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், திருவாரூர் மாநாட்டில் பங்கேற்பது குறித்து நேற்று நகரில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா ராம், நகர செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநாட்டில் அனைத்து ஒன்றிய, நகர, கிளை சார்பிலும் அனைவரும் கலந்து கொள்வது, ஆண்டிபட்டியிலும் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, இளைஞரணி மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்….

The post திமுக ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Andipatti ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு...