×

திமுக ஆட்சியில் திரையுலகிற்கு நல்லது நடக்கும்: நடிகர் விஷால் பேட்டி

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘எனிமி’, ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். தயவுசெய்து போஸ்டர்கள், கட்-அவுட்கள் வைக்காதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வடிவேலு மீண்டும் நடிக்க வருவதில் எனக்கு மகிழ்ச்சி. தமிழ் திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஜிஎஸ்டி வரி, உள்ளாட்சி வரி இரண்டையும் கட்டும் ஒரே மாநிலம் தமிழகம். அதை மாற்றினால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் படத்தை உருவாக்கிவிட்டு, திரையரங்குகளா? ஓடிடி தளங்களா என்று திண்டாடுகின்றனர். இனி திரையுலகிற்கு நல்லது நடக்கும். காரணம், உதயநிதி எம்எல்ஏ ஆகியுள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்வராகி இருக்கிறார். கண்டிப்பாக திரைத்துறைக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்கள் விரைவில் திரையரங்குகளுக்கு திரும்புவார்கள்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வழக்கு, லிஸ்ட் ஆனால் மட்டுமே எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் யாருக்கும் உதவி செய்ய முடியவில்லை. மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என்று மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். திமுக ஆட்சியின் செயல்பாடுகள் மேற்கொண்டு நன்றாக இருக்கும் என்று அனைத்து தரப்பு மக்களும் நம்புகின்றனர். ஐதராபாத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தபோது மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி பேசுகிறார்கள். இவர்கள் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும். இவ்வாறு விஷால் கூறினார்….

The post திமுக ஆட்சியில் திரையுலகிற்கு நல்லது நடக்கும்: நடிகர் விஷால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vishal Petty ,Chennai ,Vishal ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நடந்த துயர...