×

திமுக அரசு நிகழ்த்தியுள்ள சாதனைகள் உள்ளாட்சியிலும் தொடர மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்: திருநெல்வேலி தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:  திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை-காணொலி வாயிலாகத் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:  குடியரசு நாள் விழா அணிவகுப்பில், தமிழக விடுதலை வீரர்களின்  திருவுருவச் சிலைகள் உள்ள அலங்கார ஊர்தியை அனுமதிக்காமல் யாரு வ.உ.சி,  அவர் என்ன பிஸினஸ் மேனா என்று கேட்டிருக்கிறார்கள். நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், தமிழ்நாட்டு வீரர்களுடைய  புகழ் யாருக்கும் தெரியாமல் போய்விடுமா, ஆனால், இன்றைக்கு அந்த அலங்கார  ஊர்திகள் தமிழ்நாடு முழுவதும் வலம் வந்து, அதற்கு நீங்கள் கொடுத்த  வரவேற்பையும்; நம்முடைய விடுதலை வீரர்களை நீங்கள் கொண்டாடியதையும்; இந்தியா  மட்டுமல்ல உலகமே திரும்பி பார்த்தது. அதுதான் தமிழ்நாடு.  ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வருவேன் என்று  வாக்குறுதி தந்தேன். அதன்படி, ஓ.பன்னீர்செல்வமும் நீங்களும் கூட்டணி வைத்து  முடக்கிவிட்டுச் சென்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் இப்போது செயல்படப்  போகிறது. தொடர் தோல்விகளின் விரக்தியில் அதிமுகவினர்  உளறிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய  விரக்தியாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள். 21 மாநகராட்சிகள் – 138  நகராட்சிகள் – 490 பேரூராட்சிகள் – என மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்புகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. 1374 மாநகராட்சி உறுப்பினர்கள்  -8288 பேரூராட்சி உறுப்பினர்கள் – 3468 நகராட்சி உறுப்பினர்கள் ஒரே  கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இவை அனைத்திலுமே கழக  வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். எல்லா இடங்களிலும் முழுமையான  வெற்றியை நாம் அடைந்தால்தான் கோட்டையில் இருந்து நாம் அறிவிக்கிற  நலத்திட்டங்கள் எல்லாம் கடைக்கோடி மனிதரையும் முறையாக, சரியாகப் போய்ச்  சேரும். சட்டமன்றத்தில் நிறைவேற்றுகிற திட்டங்களை – அரசாங்கம் வழங்கும்  உதவிகளை  மக்கள் கையில் சேர்க்கும் கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி  அமைப்புகளின் பிரதிநிதிகள் கையில்தான் இருக்கிறது. அதனால்தான் அனைத்து  நன்மைகளும் அனைவரையும் சென்றடைய நமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி  பெறவேண்டும் என்று நான் சொல்கிறேனே தவிர, வேறல்ல. நடக்க இருக்கும்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுக்க உள்ள 12 ஆயிரத்து 825  பதவிகளிலும் திமுக வேட்பாளர்களும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்  வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான்  அது முழுமையான வெற்றியாக மகத்தான வெற்றியாக இருக்கும். வெற்றி பெற்று உள்ளாட்சிப் பதவியில் உட்கார  உள்ள தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மக்கள்  பிரதிநிதிகள் உங்களுக்காக உண்மையாக உழைப்பார்கள். தமிழ்நாடு அரசு  செயல்படுத்தும் திட்டங்களை உங்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.  மக்கள் கூப்பிட்ட குரலுக்கு வருவார்கள். உங்களைத் தாங்கும் நிலமாக  இருப்பார்கள். உங்களைக் காக்கும் அரணாக இருப்பார்கள். தாயைப் போல உங்கள்  மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகளை நான்  இங்கிருந்து தொடர்ந்து கண்காணிப்பேன். உங்களுக்குப் பணியாற்றக்  கட்டளையிடுவேன். நம் அரசு தீட்டும் திட்டங்கள் உங்களை வந்து  சேர்ந்துவிட்டதா என்று நானே சரிபார்ப்பேன். என்னை நம்பி வாக்களியுங்கள்.  உங்கள் அனைவரது கோரிக்கையையும் நான்   நிறைவேற்றித் தருகிறேன். வெற்றிவிழாவில் தமிழ்நாடு முழுவதும் வந்து உங்கள்   எல்லோரையும் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார். ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ராகுல், பினராயி விஜயன், உமர் அப்துல்லா பங்கேற்புதந்தை பெரியாரும்,  பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் ஊட்டி  வளர்த்த கொள்கையில் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அன்று  வளர்ந்து வந்தார்கள். இன்றைக்கு இலட்சோப லட்சம் திராவிட முன்னேற்றக்  கழகத்தின் தொண்டர்களால் தலைவராகவும் கோடிக்கணக்கான மக்களால்  முதலமைச்சராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன் என்றால் அதற்கு அவர்கள்  ஊட்டிய உரமும் கொள்கைத் திறமும்தான் காரணம்.இந்த நிகழ்வுகளை எனது  வாழ்க்கைக் குறிப்புகளாக நான் எழுதி இருக்கிறேன். ‘உங்களில் ஒருவன்’ நூல்  முதல் பாகமாக வருகிற 28-ஆம் தேதி சென்னையில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட  இருக்கிறது. ராகுல்காந்தியும், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பீகார் மாநிலத்தின்  எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வீ வருகை தர இருக்கிறார்கள். பொதுச்செயலாளர்  துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் – கவிப்பேரரசு வைரமுத்து,  இனமான நடிகர் சத்யராஜ் உரையாற்ற இருக்கிறார்கள். எனது முதல் 23 ஆண்டு கால  வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை இந்த முதல் பாகத்தில் பதிவு செய்துள்ளேன்.  …

The post திமுக அரசு நிகழ்த்தியுள்ள சாதனைகள் உள்ளாட்சியிலும் தொடர மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்: திருநெல்வேலி தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Secular Progressive Alliance ,CM ,M.K.Stal ,Tirunelveli ,CHENNAI ,DMK ,President ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு...