×

திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது; திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.  ஒரு காலத்தில் திரைப்பட தணாரிப்பில் இருந்தவன் நான். ஒரு சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.  திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது என மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2 ஆண்டுகாலம் கொரோனாவால் பல்வேறு துறையினர் பாதிப்படைந்தனர். அதில் திரையுலகமும் பாதிப்புக்குள்ளானது. லட்சக்கணக்கான மக்கள் திரைத்துறையை நம்பி உள்ளனர். பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாகும். திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு என பேசினார். திரைத்துறையாக இருந்தாலும் செய்தித்துறையாக இருந்தாலும் தமிழ்நாடு மிக நீண்ட வரலாறு கொண்டதாகும். தொழில்துறை முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில் துபாய்க்கு சென்று வந்தேன் என கூறினார். மாநிலத்தின் உரிமைகளை உரிமையோடு கேட்க வேண்டும் என்பதற்காக தலைநகரம் டெல்லிக்கு சென்று வந்தேன் என பேசினார். இவ்வாறு தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். …

The post திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது; திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Convention ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,MCM ,South Indian Media and Entertainment Conference ,Nandambakkam, Chennai ,of Tamil Nadu ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை