×

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி 700 கிலோ பறிமுதல்

திண்டுக்கல், டிச. 9: திண்டுக்கல் நகர் பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அதனை ரைஸ் மில்களுக்கு மாவு அரைக்க பயன்படுத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், எஸ்ஐ கார்த்திகேயன், சிறப்பு எஸ்ஐ பனைய ராஜா, செல்வம் மற்றும் போலீசார் திண்டுக்கல் ஆர்எம் காலனி வெக்காளியம்மன் கோயில் அருகே தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது காரில் தலா 50 கிலோ எடையுள்ள 14 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கார் டிரைவர் திண்டுக்கல் டேவிட் நகரை சேர்ந்த வினோத் குமார் என்ற நாகேந்திரன் (36) என்பதும், சுமை தூக்கும் தொழிலாளி லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்தீபன் (22) என்பதும், கோவிந்தாபுரம் பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்து மாட்டு தீவனம் அரைக்க கொண்டு சென்றதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, 700 கிலோ ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்தனர்.

The post திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி 700 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Nagar ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்...