×

திசையன்விளை உலக இரட்சகர் திருத்தல பெருவிழாவில் சப்பர பவனி

திசையன்விளை, செப்.30: திசையன்விளை உலக இரட்சகர் திருத்தல 140ம் ஆண்டு பெருவிழாவின் 10ம் நாளான நேற்று மதியம் நகர வீதிகளில் சப்பர பவனி நடந்தது. இதில் பெருந்திரளான மக்கள் உப்பு மிளகு காணிக்கையாக செலுத்தினர். திசையன்விளை உலக இரட்சகர் திருத்தல பெருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடந்தது. தினசரி காலை திருப்பலியும், மாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடந்தது. பல்வேறு பங்குத்தந்தையர்கள் இதில் கலந்து கொண்டனர். நேற்று 10ம் திருவிழாவன்று காலை தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.

அருட்தந்தையர்கள் தனிஸ் ஜோ, விக்டர், நெல்சன் பால்ராஜ், குணா மறையுரை நிகழ்த்தினர். புதுநன்மை பெறும் சிறுவர் சிறுமிகள் சிறப்பித்தனர். தொடர்ந்து மதியம் நகர வீதிகளில் சப்பர பவனி நடந்தது. இதில் பொதுமக்கள் நேர்ச்சையாக உப்பு, மிளகு, மாலைகளை காணிக்கையாக செலுத்தினர். இரவு நற்கருணை ஆசீர் நடந்தது. இன்று காலை நன்றி திருப்பலியும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது. மாலை நடைபெறும் அசன விருந்தை சமாரியா தூய யோவான் ஆலய சேகரகுரு செல்வராஜ் ஜெபம் செய்து துவக்கி வைக்கிறார்.

ஏற்பாடுகளை திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான அந்தோனி டக்ளஸ், பங்குப்பேரவை, அருட்
சகோதரிகள், அன்பியங்கள், இறைமக்கள் செய்து வருகிறார்கள்.

The post திசையன்விளை உலக இரட்சகர் திருத்தல பெருவிழாவில் சப்பர பவனி appeared first on Dinakaran.

Tags : Sabbara Bhavani ,Vektarivlai World Savior Church Festival ,Veketyanvilai ,Veketyanvilai World Savior Shrine ,Sappara Bhavani ,Vektyanvilya World Savior Church Festival ,
× RELATED திசையன்விளை மனோ கல்லூரியில் இன்று ஆதார் முகாம்