×

தாராபுரத்தில் புதிய மேம்பாலத்தில் விரிசல்: கான்கிரீட் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி மத்திய பஸ் நிலையம் எதிரே சாலை விரிவாக்க பணியின் போது அனுப்பர்பாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை புதிய நான்குவழி சாலை அமைக்கப்பட்டது. இதனிடையே தாராபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே சுமார் 300 மீட்டர் தூரம் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு 3 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் இன்னும் பாலம் திறப்பு விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதி அருகே மேம்பாலத்தில் 10 கிலோ எடை கொண்ட கான்கிரீட் துண்டுகள் இடிந்து கீழே விழுந்தது. மேலும் தூண்களில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் பாலத்தின் கான்கிரீட் பகுதி இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும் பாலத்தின் மேல் பகுதியில் கனரக வாகனங்கள் செல்லும் போது கடும் அதிர்வுகள் ஏற்பட்டு பாலத்தின் கீழ் நடந்துசெல்லும் பயணிகள், பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், வாகனங்களில் பயணம் செல்பவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பொது மக்கள் பீதியில் உள்ளனர்….

The post தாராபுரத்தில் புதிய மேம்பாலத்தில் விரிசல்: கான்கிரீட் இடிந்து விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tirupur District ,Tarapuram Municipal Central Bus ,Paddarpalayam ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் விளையாட்டில் ரூ7 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை