சென்னை: சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ரசாயன கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரசாயனம் கலக்கப்படுதாக யாரோ வதந்தி பரப்புவதாக புகார் தெரிவித்துள்ளார். தேவைக்கும் குறைவாகவே மீன்கள் பிடிக்கப்படுவதால் ஃபார்மலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லை என்றும், அச்சமின்றி மீன் உணவை அனைவரும் உண்ணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
