×

தாம்பரம் ரயில் நிலையம் அருகே அடையாள அட்டை வைத்துள்ள வியாபாரிகள் கடை நடத்தலாம்: மாநகராட்சி அனுமதி

தாம்பரம்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில், தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஏராளமான நடைபாதை கடைகள் உள்ளன. பல ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த கடைகள், தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது, சிறுகடை வியாபாரிகள் வெண்டிங் கமிட்டி என அமைக்கப்பட்டு நகராட்சி அனுமதியுடன் செயல்பட்டு வந்தது.இந்த கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக வந்த புகாரின் பேரில், கடந்த 4ம் தேதி தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் உத்தரவின்பேரில், அங்கு வந்த போலீசார் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தினர். அப்போது வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த   வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுத்துக்கொள்ளலாம் என கூறி, வியாபாரிகளை போலீசார் அங்கிருந்து கலைய செய்தனர். இந்நிலையில், நேற்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வியாபாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது அடையாள அட்டை வழங்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் மட்டும் கடைகள் நடத்திக் கொள்ளலாம். அவ்வாறு கடை நடத்தும் வியாபாரிகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாதவாறு கடை நடத்த வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் கடை நடத்தக்கூடாது என, மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்….

The post தாம்பரம் ரயில் நிலையம் அருகே அடையாள அட்டை வைத்துள்ள வியாபாரிகள் கடை நடத்தலாம்: மாநகராட்சி அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tambaram railway ,Thambaram ,Thambaram GST road ,Thambaram railway station ,Tambaram ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பலி