×

தாம்பரம் மாநகராட்சியில் 43 சதவீத வாக்குப்பதிவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 43 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தாம்பரம் நகராட்சி அருகில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை இணைத்து சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளையும், திருநீர்மலை, மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம் ஆகிய பேரூராட்சிகளையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அரசாணை வெளியிடப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை நேர முடிவின்படி தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 43 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சிட்லபாக்கம் மற்றும் செம்பாக்கம் பகுதிகளில்  வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால்  சுமார் 2 மணிநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. புதிய இயந்திரத்த்தை வரவழைத்து வாக்குப்பதிவை மீண்டும் தொடங்கினர். பின்னர் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கட்சியினர் முன்பு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தாம்பரம் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாம்பரம் மாநகராட்சி ஆணையருமான இளங்கோவன் சம்பவ இடத்திற்கு வந்து தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார்….

The post தாம்பரம் மாநகராட்சியில் 43 சதவீத வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Tambaram Municipality… ,Tambaram Municipality ,Dinakaran ,
× RELATED கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வரைபட திட்ட ஆய்வாளர் கைது