×

தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு

தர்மபுரி, செப்.20: தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி, கத்திரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அதிகம் விளைவிக்கப் படுகிறது. இந்த காய்கறிகளை விவசாயிகள் நேரடியாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, ஒட்டப்பட்டி அரூர், பாலக்கோடு உழவர் சந்தைகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். கடந்த இருமாதங்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ₹100 வரை விற்பனையானது.தக்காளி விளைச்சல் அதிகரித்ததையடுத்து, வரத்தும் அதிகரித்து தக்காளி விலை சரிவு ஏற்பட்டது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ₹10 முதல் ₹14 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கத்தரி கிலோ ₹10, வெண்டை ₹10, கொத்தவரை ₹10, புடலங்காய் ₹10, சுரைக்காய் ₹10, பீர்க்கங்காய் ₹16, முருங்கை ₹30, முட்டைகோஸ் ₹20 என, பல காய்கறிகளுக்கும் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. விலை சரிவால் நுகர்வோர் மகிழ்ச்சியாக இருந்த போதும், விவசாயிகளுக்கு வருவாய் குறைந்துள்ளது.

The post தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம்...