×

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்: வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் 50% பயணிகளுக்கு மட்டும் அனுமதி

புதுச்சேரி: தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி, மருத்துவத்துறை அமைச்சர், துறை அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர். புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள்: * மால்கள், வணிக நிறுவனங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி* கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிகளை நடத்த அனுமதி* உணவகங்கள், பார்கள், மதுபானக் கூடங்களில் 50% பேருக்கு மட்டும் ஆனுமதி* கோயில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி* வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் 50% பயணிகளுக்கு மட்டும் அனுமதி…

The post தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்: வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் 50% பயணிகளுக்கு மட்டும் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,
× RELATED கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற...