×

தமிழில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில் கூறுவதா?: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடும் கண்டனம்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியில் பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது நேரடி அந்நிய முதலீடு பற்றி மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி கேள்வி எழுப்பினார். தமிழில் அவர் எழுப்பிய கேள்விக்கு வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் அளித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த கணேசமூர்த்தி, ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்கும் ஒன்றிய அமைச்சர், தமிழ் கேள்விக்கு இந்தியில் பதில் அளிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி மட்டுமின்றி தமிழ்நாட்டை சேர்ந்த பிற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிர்ப்பினை தெரிவித்தனர். ஆனால் கேட்கும் மொழியில் தான் பதில் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விதிகளில் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய பியூஷ் கோயல், தொடர்ந்து இந்தியிலேயே பதில் அளித்தார். அப்போதும் எதிர்ப்பு தெரிவித்த கணேசமூர்த்தியை, மொழி பெயர்ப்பை கேட்பதற்கான ஹெட் போனை பயன்படுத்தும்படி சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். வழக்கமாக இந்தியிலேயே பேசும் சபாநாயகர், கணேசமூர்த்தியை சமாதானப்படுத்துவதற்காக ஆங்கிலத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. …

The post தமிழில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில் கூறுவதா?: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடும் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Piyush Goyal ,Parliament ,Delhi ,Tamil Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…