×

தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்துக்களை அனுப்பலாம்: அமைப்புகளுக்கு ஆணையர் வேண்டுகோள்

சென்னை: தமிழில் குடமுழுக்கு நடத்தும் நடைமுறை குறித்த கருத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும்படி ஆணையர் குமரகுருபரன் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் கூட்டம் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கைகளின்படி தமிழில் மந்திரங்களை ஓதி, திருக்குட நன்னீராட்டு நடத்திவரும் அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை கோருவதென முடிவு எடுக்கப்பட்டது.  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் சமஸ்கிருதம் மட்டுமின்றி ஒரே சீராக தமிழில் குடமுழுக்குகள் நடத்திட ஏதுவாக தமிழ் ஆகம முறைப்படி திருமுறை (சைவ கோயில்கள்) பிரபந்த (வைணவ கோயில்கள்) மந்திரங்களை ஓதி திருக்குட நன்னீராட்டு விழா நடத்திவரும் அமைப்புகள் செயல்முறைகளை விளக்கங்களுடனும் இதுவரை நடத்திய நிகழ்வுகளுக்கான சான்றுகளுடனும் கருத்துகளை அனுப்பி வைக்க வேண்டும். இதனை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆணையர் குமரகுருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்….

The post தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்துக்களை அனுப்பலாம்: அமைப்புகளுக்கு ஆணையர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kutamum ,Chennai ,Minister of State ,Hindu Religious Fisheries Commission ,Tamil ,Kudumum ,
× RELATED இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத்...