தமிழக கோயில்களில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அறங்காவலர்கள் குழு நியமனம்: அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: தமிழக கோயில்களில்  10 ஆண்டுகளுக்கு பிறகு அறங்காவலர்கள் குழு நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை அனுப்பி வைக்குமாறு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று 2019ல் உத்தரவிட்டது. எனினும், அறநிலையத்துறை சார்பில் மாவட்ட குழு அமைத்ததே தவிர தொடர்ந்து அறங்காவலர் குழுவை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.  இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத கோயிலுக்கு அறங்காவலர் நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கமிஷனர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமன விவரம் தொடர்பான தகவல்களை அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். அதில், இணை ஆணையர் மண்டலம் (உதவி ஆணையர் சரக வாரியாக), அறங்காவலர்கள் நியமனம் செய்யக்கூடிய மொத்த திருக்கோயில், அறங்காவலர் நியமனம் செய்யப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை, நிலுவை உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகவும் அனுப்ப உதவி ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கோயில்கள் எத்தனை?அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 672 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கோயில்களுக்கு தேவையான அறங்காவலர் குழுவுக்கு நியமிக்க உள்ள தகுதியானோரின் பட்டியல் தயார் செய்யப்படும். குறைந்த பட்சம் 3 பேரும்  அதிகபட்சம் 5 பேரும் கொண்ட அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்….

The post தமிழக கோயில்களில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அறங்காவலர்கள் குழு நியமனம்: அறநிலையத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: