×

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
24 மணி நேரத்தில் தமிழகத்தில், செய்யூர், வளவனூர் தலா 7 செ.மீ., திருக்கோவிலூர், வீரபாண்டி, பரங்கிப்பேட்டை தலா 4 செ.மீ., மணல்மேடு, ஏரையூர் தலா 3 செ.மீ., செந்துறை, அவலாஞ்சி, திருத்துறைப்பூண்டி, வடபுதுபட்டு தலா 2 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தாலும், வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம்...