×

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளா?… கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் 909 பேருக்கும், செங்கல்பட்டு 352, காஞ்சிபுரம் 71, திருவள்ளூர் மாவட்டத்தில் 100 பேருக்கு என தமிழகம் முழுவதும் 2,069 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் இதுவரை ஏற்படவில்லை. எனவே கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையிலும், தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து  நடத்திடவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

The post தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளா?… கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M.K.Stalin ,Corona ,Dinakaran ,
× RELATED அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து