×

தமிழகத்தில் புதிதாக 1,329 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,329 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,329 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,78,265 ஆக உள்ளது. 1,436 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோரின்  எண்ணிக்கை 26,26,352. கொரோனாவிற்கு 12 பேர் நேற்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 35,783 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை உட்பட 30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. அதிகபட்சமாக நேற்று சென்னையில் 171 பேர், கோவையில் 132 பேர் என 2 மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு  100க்கும் கீழ் குறைந்துள்ளது….

The post தமிழகத்தில் புதிதாக 1,329 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED திருச்சியில் இருந்து சென்னை நோக்கி...