×

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2000-ஐ தாண்டியது; கொரோனாவால் ஒரே நாளில் 2,342 பேர் பாதிப்பு: 16 பேர் பலி; 14,846 பேருக்கு சிகிச்சை; சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள்  எண்ணிக்கை 8 லட்சத்து 84 ஆயிரத்து 094 (8,84,094) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை  வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  * தமிழகத்தில் மேலும் 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,84,094  ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,463 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,56,548 குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,700 ஆக  உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 09; தனியார் மருத்துவமனையில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 874 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,48,031 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,95,11,655 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 83,154 மாதிரிகள்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 14,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,33,873 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,404  ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,50,185 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 938  பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை  யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 190.* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 08 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. * மேற்கு வங்கம்-3.* ஜார்கண்ட்-4.* கர்நாடகா-1.* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த 02 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* UAE-2.   …

The post தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2000-ஐ தாண்டியது; கொரோனாவால் ஒரே நாளில் 2,342 பேர் பாதிப்பு: 16 பேர் பலி; 14,846 பேருக்கு சிகிச்சை; சுகாதாரத்துறை அறிக்கை.!!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற...