×

தமிழகத்தில் டி.ராஜா 6 நாள் பிரசாரம்

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தமிழகத்தில் 6 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான டி.ராஜா தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக 29ம் தேதி தமிழகம் வந்து, ஏப்ரல் 3ம் தேதி வரை 6 நாட்கள் வாக்காளர்களை சந்தித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். 29ம் தேதி கோயம்புத்தூர், 30ம் தேதி கிருஷ்ணகிரி, 31ம் தேதி திருப்பூர், ஏப்ரல் 1ம் தேதி மதுரை, சிவகங்கை, 2ம் தேதி திருவாரூர், 3ம் தேதி சென்னை ஆகிய இடங்களில் பேசுகிறார்….

The post தமிழகத்தில் டி.ராஜா 6 நாள் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : D. Raja ,Tamil Nadu ,Chennai ,India ,General Secretary ,Communist Party of India ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...