×

தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 7 பேர் கைது

 

மதுரை, ஜூன் 6: மதுரை மாநகர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை தொடர்பாக போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி, நேற்று முன்தினம் தல்லாகுளம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி பகுதிகளில் உள்ள டீ மற்று்ம பெட்டிக்கடைகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், தல்லாகுளம் பெருமாள்கோயில், ஜம்புராபுரம் மார்க்கெட், மாட்டுத்தாவணி மார்க்கெட் மற்றும் மஸ்தான்பட்டி டோல்கேட் பகுதிகளில் இருக்கும் கடைகளிலிருந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த கடைகளிலிருந்த 7 பேரை கைது செய்தனர்.

The post தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!