தஞ்சாவூர், டிச.30: தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 22ம்தேதி வெளியிடப்படும் என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய அட்டவணையின்படி தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024ல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நிறைவு பெற்று வரும் 5ம் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் திருத்தி அமைக்கப்பட்ட தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024க்கான அட்டவணை ஜனவரி 22ம் தேதி வெளியிடப்படுகிறது. எனவே வரைவு வாக்காளர் பட்டியல் மீதான கோரிக்கைகள் ஆட்சேபனைகள் மற்றும் டிசம்பர் 26ம் தேதிக்கு மாறாக ஜனவரி 12ம் தேதியும், திருத்த பணிகள் சரிப்பார்பு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணைய கோரும் காலம்,
அனுமதி வாக்காளர் பட்டியல் தரவுகள் சரிபார்ப்பு மற்றும் துணைப்பட்டியல் அச்சிடுதல் ஜனவரி 1ம் தேதிக்கு பதிலாக 17ம் தேதியும், இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ம் தேதிக்கு பதிலாக 22ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் திருத்தி அமைக்கப்பட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2024 கால அட்டவணையின்படி 22ம் தேதி (திங்கள்கிழமை) அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.22ம் தேதி வெளியிடப்படும் appeared first on Dinakaran.