×

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

 

தஞ்சாவூர்,நவ.10: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வாசல், சிரேஸ் சத்திரம் பகுதியில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மனநல மறுவாழ்வு மைய அன்பாலயத்தில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி கரந்தை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகர நலஅலுவலர் சுபாஷ் காந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தாசில்தார் அருள்ராஜ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Corporation ,Thanjavur ,Deepak Jacob ,Thanjavur Municipal Corporation ,
× RELATED மண்பாண்டங்கள் செய்ய களிமண் எடுக்க அனுமதி